முனைவர் கு.அரசேந்திரன்

முனைவர் கு.அரசேந்திரன் தமிழுலகம் அறிந்த பெயர். தாம்பரம் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 1987 முதல் 2014 வரை தமிழ்ப்பேராசிரியராக-தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். இலக்கியம், இலக்கணம், சமயம். வரலாறு மெய்யியல் ஆகிய துறைகளில் புலமை மிக்கவர். ஆயினும் மொழியாய்வை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு எழுதியும் பேசியும் வருபவர். உலகின் 700 கோடி மக்களில் 400 கோடி மக்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் சார்ந்தவர்கள். இந்நானூறு கோடி மக்கள்பேசும் மொழிகளும் 10-15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிலிருந்து பிரிந்து சென்று உருவான மொழிகள் என்பது இவரின் கருத்து. தமிழ் இந்தோ – ஐரோப்பிய உறவுகளை ஆய்ந்து வருபவர்களில் இன்று இவர் குறிப்பித்தக்கவர்.